கோவிட்- 19 சமூக பாதுகாப்பு நலனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவு சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

 கோவிட்- 19 சமூக பாதுகாப்பு நலனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவு சம்மாந்துறையில் வழங்கி வைப்பு

ஐ.எல்.எம் நாஸிம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 சமூர்த்தி வங்கிகளூடாக 16937 பயனாளிகளுக்காக 87.67 மில்லியன் ரூபா நிதியை சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (18) சம்மாந்துறையில் இடம்பெற்றது. 
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நேரில் சென்று குறித்த வேலைத் திட்டத்தினை அமுல்படுத்தினர்.
இதன்போது சம்மாந்துறையின் உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், தலைமைபீட முகாமையாளர் யூ.எல்.எம். சலீம், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம். அம்சார், சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Digiqole ad

editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *