சம்மாந்துறையில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

 சம்மாந்துறையில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழ்வாதாரம் இன்றி சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ( மே 16) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் 2015 O/L Batch Foundation எனும் இளைஞர்கள் அமைப்பினால் சுமார் 500 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இரண்டு கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

தனது ஊர் மக்களுக்காக தனது அங்கத்துவ உறுப்பினர்களினதும், பிரமுகர்களின் உதவிகளையும் கொண்டு இத் திட்டம் நடைமுறை செய்யப்பட்டது.

மேலும் 2015 O/L Batch Foundation என்பது சம்மாந்துறையில் சமூக சேவைகள் செய்து வரும் பாரிய இளைஞர் அமைப்பாக செயற்பட்டு வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.

Digiqole ad

editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *